Tuesday, 2 August 2011

முகநூலும் நானும்.

                                  திங்கள் தினத்தந்தி தந்த சேதி,
முகநூல் பின்னடைவு,உலகஅளவில் எடுத்த கணக்கடுப்பில்,
முகநூல் 15 வயது முதல் 25 வயதுவரை விரும்பிய இப்பக்கம்,
தற்போதய கணக்கடுப்பில் 40 வயதுக்கு மேற்ப்பட்டவர்கள் தான்,
அதிகம் உள்ளதாகவும்,கூகுள் சமூக இணையதளம் முதலிடம் 
வகிப்பதாக வந்துள்ள செய்தி தெரிவிக்கிறது.
முகநூல் என்பது என்பார்வையில்,
       பால்ய  வயதில் தாய் போல,
      இளம் வயதில் காதலி போல,
     முதுமையில் மனைவிபோல,
     உணர்கிறேன்.
பருவங்கள் மாறும் போது உணர்வுகளும் மாறாத்தன் செய்கிறது.
அதை பகிர்ந்து கொள்ள உறவுகளும் மாறத்தான் வேண்டும்.
இப்படி முகநூலில் மனித முகங்களை மட்டும் தேர்வு செய்து,
நட்பு பாராட்டி பதிய ஒரு தளம் இது என்பதில் ஐயமில்லை.

தவறுகள் இல்லா மனிதம் மாற்றம் காணாது,நமக்கு உள்ளதை 
அல்லது தேவையை தெரிந்து தெளிந்தால்.நாடும் வீடும் நலம் பெறும்.


அன்று வள்ளுவம் சொன்னது(முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து 
அகநக நட்பது நட்பு)
இன்றைய நடப்பு  முகநூல்நட்பே அகநக நட்பின் ஆரம்பம் ஆனது.

நான் மேலும் உணரும் ஒரு மகத்தன விடயம் என்தனிமை தவிர்க்க 
படுகிறது.
முகநூலில் உலவும் நேரம் என் அருகில் அமர்ந்து நட்புக்கள் அளவளாவுதாகவே தோன்றும்.
கற்றது  கைமண் அளவு கல்லாதது உலகளவு.
அவ்வையின் முது மொழி.
இச்சிறப்பும் முகநூலுக்கு முழுமையாய் உண்டு.
வாழட்டும் முகநூல்,வளரட்டும் நட்பு.
நட்புடன் சேகர்.. 
 
    

No comments:

Post a Comment