Friday 29 July 2011

காதல் மனைவி கலாவதி.

                                              நானும் சாதனையாளந்தான்!!!!  
 காதலித்த காதல் கதை பள்ளி பருவம்.அதைதான்,
காதல் கதையில் சொன்னேன்.
அதன் பின் நடந்ததெல்லாம் வறுமையின் விளையாட்டு.
அதனை 16 ஆண்டுகள் சந்தித்து என் 30 வது வயதில்,
நான் சந்தித்த இன்றைய மனைவி கலாவதி.
1982 மார்ச் மாதம் மாலை நேரம் நாசே  நிறுவனம்.
அன்று தோன்றவில்லை இவர்கள் தான் என் துணை என்று.
மூன்று நாள் முடிந்து நான்காம் நாளில் அந்த அதிசயம் நிகழ்ந்தது.
முடிவெடுத்தேன் கேட்டும் விட்டேன் என் மனைவியாக சம்மதமா.
முடிவு  சொல்ல அவகாசம் கேட்டார்.காத்திருந்தேன் ஒருமாதம்.
 எண்ணிதுணிக கருமம் துணிந்த பின் 
எண்ணுவம் என்பது இழுக்கு.
இதற்கு உதாரணம் என்மனைவி.
முடிவு வந்தபின் காத்திருப்பு,என் தமைக்கையின் திருமணம்.
1984 பிப்ரவரி மணம் முடித்து வாழ்க்கை ஆரம்பம்.

                         
                         இதுவல்ல  நான் சொன்ன சாதனையாளன்.
2011 இது நாள் வரை எனக்காக,என் நலன் மட்டுமே கருத்தில் கொண்டு .
நான் செய்யும் அத்துணை செயல்களிலும் துணைநின்று,
பொருளால்,உடலால்,உள்ளத்தால்,ஏற்பட்ட இழப்புக்களை, வலிகளை  
கிஞ்சித்தும் மனம்கோணமல்,வாழ்ந்து வரும் என் காதல்மனைவி கலாவதி.
   
பார்ப்பது,பேசுவது ,கொஞ்சுவது இதுவெல்லாம் தெரியாது.
என்காதல் மனைவிக்கு,என்னை மட்டும் காதலிக்க தெரியும்.
இன்றுவரை நான் வாழும் வாழ்க்கை என்னை சார்ந்து வாழ்ந்த 
அனைவருக்காகவும் வாழ்ந்து வரும் என்காதல் மனைவியை 
காதலித்து  மனம் கொண்டதும் என் சாதனைதானே.
காதலிப்பது கடினமல்ல காதலை கடைசி வரை கடைபிடிப்பது 
அதுதான் சாதனை.நானும் சாதனையாளன் இன்றுவரை.
நட்புடன் சேகர்..

Thursday 28 July 2011

காதல் வந்த கதை.

எனக்கும் காதல்வரும்.,என்று எத்தனை பேரால் சொல்ல முடியும்.
அனைவருக்கும் உள்ள காதல் எனக்கும் இருந்தது.
காதல் அது வரும் தனியாக வருமா இல்லை துணை கொண்டு வருமா?
தனியாக வந்தால் அது காதல் அல்ல,துணை கொண்டு வருவதே காதல்.

எதன் மீது காதல் கொண்டாலும்,அதற்கும் வேண்டும் நம்மீது காதல்.

                                          என்காதல் 
 குட்டி குட்டி வளர்த்த தந்தை,
 திட்டி திட்டி வளர்த்த தாய்,
தமக்கை,தனயன்,
தம்பி,தங்கை,
அணைவர்மீதும் காதல் வந்தது.
அதுஒரு பருவம்.
பள்ளிமீது,கால் பந்தின் மீது காதல் வந்தது.
இதுவும் அந்தகாலம்.

பள்ளி முடிக்கும்போது கன்னிமீது வந்ததே காதல்.
இளமை பருவம்.  

இது என்ன காதல்.காதலின் அர்த்தம் அன்று தான் தெரிந்தது.

கவியால் கதை சொன்ன கம்பன், 
கதைக்கு கவி சொன்ன கண்ணதாசன்,
பசியை பாட்டால் நிரப்பிய பாரதி,
இந்த வரிசை இல்லாமல் 
எனக்கும் வந்தது கவிதை.

இதுதான்  கன்னி மீது வரும் காதலா?
காதலித்து பார் காதலும் புரியும் =கவிதையும்!!!!
நட்புடன் சேகர்..

Saturday 23 July 2011

ஆன்மீகம் என் பார்வையில்

வணக்கம் நட்புக்களே,
                                                  ஆன்மீகம் அனைவரும் அறிந்து தெளிய வேண்டிய,
அற்புதமான வாழ்க்கை பாகம்.

என்பார்வை இதில் பலருடைய பதிவுகள்,பழக்கம்,விவாதம்,பெற்ற விளக்கம்.இதன் பலன் இப்பதிவு.
நான் பதியும் இப்பதிவு யாருடைய மனதையும் புண்படுத்த அல்ல.
கருத்து பரிமாற்றம் மட்டுமே.
ஆன்மீகம் இரு வகையாய் பிரித்து பார்க்கிறேன்,
அறிவுசார்ந்த ஆன்மிகம்,
பக்தி சார்ந்த ஆன்மீகம் .
 அரசனும்,ஆள்பவனும் (முதல் போட்டு ஆள்பவன்)முதலாளி.வரை.ஆன்மீகத்தை அறிவுசார்ந்தே 
பார்த்தார்கள்.
அடியார்கள் அல்லது நாயன்மார்கள்,இவர்கள் தான் 
ஆன்மீகத்தை பக்தியுடன் அணுகினார்கள்.
அறிவுசர்ந்தது, இதன் விளக்கம்.
மந்திரம் தந்திரம்,என்று கடவுளை தன்செயலுக்கு 
வசியம் செய்வது.
பக்தி இதன் விளக்கம்.
கடவுள் அவர் மட்டுமே உலகம்.
உடல் பொருள்,ஆவி (ஆன்மா)அனைத்தும் 
அவர் சார்ந்த சமயத்திற்கு தந்து மனிதம் வாழ,
வாழ்ந்தவர்கள்.
இடைப்பட்ட மனிதம் இதை உணர்ந்து தெளிந்தால் 
காவிதரித்து கபடம் ஆடும் மாந்தர்களை அடையாளம் 
காணலாம்.
நட்புடன் சேகர்..


Friday 22 July 2011

ரஜினி ஸ்பெஷல்.

வணக்கம் நண்பர்களே,
                                                   விஜய் தொலைகாட்சி வழக்கும் சுப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் பரம ரசிகனில் நானும் என் மனைவியும்.
இந்த வாரம் திரு,கோபிநாத் தொகுத்து வழங்க ரஜினி ஸ்பெஷல் 
மிகுந்த எதிர்பார்பில் காத்திருந்தோம்.
திங்கள் முதல் வியாழன் வரை ரசிகன் முதல் சிறப்பு விருந்தினர் வரை 
திரு,கோபிநாத் ஒரு கேள்வியை முன்வைத்தார்.
உங்களுக்கு சுப்பர் ஸ்டார் ரஜினி யார்?
பதில்:கடவுள்,நண்பர்,ஆன்மா,தெய்வம்,மனிதன்,குலதெய்வம்,
இப்படியாக பழகிய,பார்த்த,பார்க்காத,ரசிகன் என்று,அனைவரும்,
தந்தபதில் தான் இது.
தவறி கூ ட ஒருவரும் அவரை சிறந்த வேண்டாம் நடிகர் என்று கூற
மறந்தார்கள்.
நடிகர்திலகம் சிவாஜிக்கு பின் நான் ரசித்த அருமையான திறமையான 
ஒருநடிகர் திரு,ரஜினிகாந்த் அவர்கள்.
அவ்ர் விரும்பிய துறை தவிர்த்து அவரை பற்றி சொல்லி என்னசாதிக்க
போகிறார்கள்.
திருந்துமா திரைத்துறை ரசிகரையும் சேர்த்து.
திரு,சய்சரண் அவர்களின் சக்தி கொடு,முத்தாய்ப்பு. 
    நட்புடன் சேகர்..

Wednesday 20 July 2011

கைபேசி களவாணிகள்.

நான் airtel இணைப்பு உள்ள ஒரு கைபேசி உபயோகிப்பவன்.
நேற்று மாலை 55 ரூபாய் எனது எண்ணிற்கு recharge செய்தேன்.
அதற்கு அவர்கள் தரும் பேசும் அளவு 43 ரூபாய் மட்டும்.
இதுவல்ல களவு,மறுநாள் காலை மிதமுள்ளதொகை 34 ரூபாய் மட்டுமே.
நான் எந்த அழைப்பும் செய்யாத நிலையில் 121 (கஸ்டமர் கேர் )அவர்களை 
அழைத்து விவரம் கேட்டால்.சிறுதுநேரம் சென்று உங்களுடைய நம்பருக்கு 
lovepack என்ற குறுந்தகவல் இணைக்கப்பட்டுள்ளது.அதற்கான கட்டணம் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இதில் வேடிக்கை அவர்களாகவே முடிவு செய்து அவர்களே என்னுடைய 
கணக்கில் பிடித்தம் செய்து அதன் விவரம் நான் என்னுடைய கணக்கை 
பற்றி கேட்டபிறகு தெரிவிக்கிறார்கள்.
அவர்களிடமே மேலும் விவரம் தாருங்கள் யாருடைய ஒப்புதலின் பேரில் 
இப்படி செய்கிறீர்கள் என்று.உடனே அவர்கள் உங்களுக்கு விருப்பம் இல்லாவிட்டால் அதை செயலிழக்க செயதுவிடுகிரோம் என்று செல்லி 
அதற்கான குறுந்தகவலை அனுப்பி வைத்தார்கள்.

இதை அவர்கள் என்னுடைய ஒப்புதலுக்கு குறுந்தகவல் அனுப்பி இருந்தால் எனக்கு இத்தனை நேரமும் பணமும் மனஉளைச்சலும்
இல்லாமல் தவிர்த்திருக்கலாம்.  
 
நான் இதில் கேட்கும் கேள்வி எத்தனை பேர் தினம் தங்களது கணக்கை சரிபார்ப்பார்கள்?
இதுவும் நமக்கு தெரியாமல் அல்லது நமது அவசர நேரத்தை பயன்படுத்தி 
களவு செய்யும் வேலை தானே.  இதைதான் தலைப்பாக தந்தேன்.
நட்புடன் சேகர்..