Sunday 24 March 2019

காதல் மனைவி கலாவதி

இதற்கு முந்தய பதிவு என்மனைவியை பற்றி2011ல்பதிவிட்டேன் .இன்றுவரை அதே நிலைப்பாட்டில் என் காதல் மனைவி கலாவதி,எத்தனை மாற்றம் வாழ்வில் வந்தாலும் இப்படி ஒரு துணை கிடைத்துவிட்டால் சாதித்து விடலாம்.மாற்றங்களை ஏற்றுகொள்கிறபக்குவம் சிலருக்கே உண்டு அதில் என் கலா சிறப்பு சந்தித்த மணிதர்கள் நண்பர்கள் உறவுகள் அத்துனையும் என்னில்  பலவித சோகங்களை ஏற்படித்தினாலும் வாழ்வின் விளிம்பில் நின்றுகொண்டிருக்கும் இந்த தருணத்திலும் ஒற்றை ஒளிகீற்றாய் விழாமல் என்னை தாங்கிபிடிக்கும் சாயுமானமாய் விளங்கும் என் காதல் மனைவிக்கு என்ன செய்துவிடபோகிறேன் என்பது தெரி
யாது.இறப்பு வரை அன்புடன் இருப்பேன் என்பது சத்தியம் நட்புடன் சேகர்

Friday 11 August 2017

புரியாத புதிர்கள்..

வணக்கம் நட்புக்களே,
                                              நிறையவே யோசித்தேன் அத்துனையும் பதியத்தான்
ஆசை,பலவித சங்கடங்கள் வாழ்வில் வருவது அனைவருக்கும் இயல்புதானே.
எனக்கும் வந்தது தேவைகள்,அதை தேடி ஓட்டங்கள்.கிடைத்தது சில,கிடைக்காதது பல இருந்தும் மனதும் உடலும் வாழ்கிறது.
இயற்கை அருளும் காலம் வரை.

 இன்றைய தலைப்பு என்னில் உறுத்தியதை உங்களிடம் பகிர்கிறேன்.


பத்திரிகை மற்றும் ஊடகங்களில் முகமூடி கொள்ளையர்கள் என்று
காவல் துறை கைது என்று சிலரை காண்பிக்கிறார்கள்,நிழற்படமாக
தருகிறார்கள்.அதில் அவர்களை முகமூடியுடன்(முகம் கருப்பு துணியால்
மறைக்கப்பட்டு)காட்டுவது எதனால்?முகம் தெரிந்தால் மற்றுமொரு
சந்தர்ப்பத்தில்  அவர்களை அடையாளம் காண வாய்ப்பிருக்கும்.
இதை பத்திரிகை நண்பர்கள் ஏன் காவல் துறையிடம் கேட்காமல்
அவர்கள் தரும் அல்லது மறுப்பில்லாமல் செய்கிறார்கள்.

அரசியல் மற்றும் சினிமா துறை சார்ந்த குற்றங்களை நிகழ்வுகளை
அதிக முக்கியத்துவம் தரும் அவர்கள் சமுதாய முக்கியத்துவம்
வாய்ந்த அணைத்து விடயங்களிலும் வெளிப்படையான கொள்கையை  
கடைபிடிக்க முயலுவார்களா.
நட்புடன் சேகர்..

Saturday 9 March 2013

அன்பு நட்ப்புக்களுக்கு வணக்கம்,

                                                                      பெண்கள் தினம் பற்றி என்னுடைய கருத்துக்களை பதியவே இப்பதிவு.

ஒருநாளை இதற்காக என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை.
இருந்தும் மகளிர் என்பது தனி சிறப்பு வாய்ந்தது என்பதாலே 
இந்நாளில் என் கருத்தை பதிய இந்நாளை பயன்படித்திக்கொள்ள 
ஆசைப்பட்டேன்.

ஒருஆண் பெண்ணில்லாமல் வாழ்வது என்பது இயலாது.
அதே பெண் ஆண் இல்லாமல் வாழ்ந்துவிட முடியும்.
இது இயற்க்கை விதிகளின் படி சாத்தியமே.

இருந்தும் ஆண் இனம் எப்படி பெண்ணை இத்தனை 
அடிமை படித்தி வாழ்கிறது என்பது விசித்திரம்.

இன்றய சூழலில் பெண்விடுதலை,33 சதவிகிதம்,பெண் பாதுகாப்பு
 சமூக,பொருளாதார,கலாச்சார என்று பெண்கள் குரலும் அதற்க்கு 
ஆதரவும்,ஆதரவு தருவதுபோல் பாவனையும் தந்து பல அமைப்புகளும் 
விவாதித்து மகிளிர் தினத்தை முடித்துவைத்தனர்.

பெண்ணுக்கு ஆண் சரிநிகர் என்ற கோட்பாடு வரவேண்டும்.
அதை இருபாலரும் உணரவேண்டும்.
பொருளாதார, கலாச்சார, அரசியல், சமுதாய, சமூக,வேலைவாய்ப்பு ,
பயனமுறை,குழந்தை பராமரிப்பு,நட்பு முறை,உறவு,நீதி,சட்டம்,இப்படி 
எதிலும் பொதுமுறை வரும் வரை ஆண் என்பவன் தன்னை தனித்தே 
உணருவான்.

பாலினம் மட்டுமே வேறு மற்றவை யாவும் ஒன்று என்ற மனோ 
நிலை இருபாலருக்கும் ஏற்பட்டு மனிதம் போற்றி வாழ்வோம் 
என்ற நிலை வரும் போது,மகிளிர் தினம் என்ற ஒன்று இருந்தது
என்று ஆகிப்போகும்.

இதுதான் நட்புக்களே நான் விரும்பி இருப்பது.

நட்புடன் சேகர்..   
                                    

Thursday 29 March 2012

narudal

வணக்கம் நட்புக்களே,
                                          தினம் தினம் நினைப்பது இன்று மட்டுமே சாத்தியம் ஆனது. வேறு ஒன்றுமில்லை
நினைப்பதை பதிவது.சேதிகள் பல! அதுதரும் அழத்தம்
தான் நம்மில் பலருக்கு வேதனை.

இன்றும் அரசியல் தவிர்த்து வந்த சேதி பலயிருந்தும்
கட்டாய திருமணம் செய்து கொடுமை,17 வயது மாணவி
கற்ப்பழிப்பு வழக்கில் பூக்கடை அதிபர் கைது,உடந்தையாக
இருந்த மாணவியின் தாய் அண்ணன் கைது.
இதுதான் செய்தி, இது காவல் துறை தரும் தகவலை
ஊடக துறை தருகிறது.சினிமா விமர்சனம் போல.
மாணவி கடந்த 5 வருடமாக சமந்தப்பட்ட நபருடன்
வசித்து அவரின் வருமானத்தை பகிர்ந்து பலன்பெற்று
வந்துள்ளார்.படிப்பை பசியுடன் ஒப்பிட முடியாது?
இருந்தும் அவளின் அறிவு பசி அதை ஒப்புக்கொண்டதா?
இல்லை இனி நம்மால் முடியும் என்ற மமதையா?     
நான் வைக்கும் வாதம் ஆணின் வக்கிரத்தை ஆதரிப்பது
அல்ல,பெண்ணினம் செய்யும் மந்திர வலை இதை
படம்பிடிக்க தவறுகிறோம்.உண்மை இருப்பக்கம் இருக்கவேண்டும்,ஓட்டை  சட்டங்கள் இப்படி தான்
விபீரிதங்களை உருவாக்கும்.

மாணவியின் துணிச்சல் என்று ஒரு தலைப்பு.
இதுஎன்ன  பம்மாத்து அம்மாவும் தப்பில்லை
அண்ணனும் தப்பில்லை,அத்துணை தவறும்
பணம் தந்து ஆதரித்தவன்.இதுதான் அந்த பெண்ணின்
வாதம்.

சட்டங்களை வைத்து இதை தண்டித்துவிடலாம்
சமுதாய கண்நோட்டம் இதை எங்கு கொண்டு
செல்லும்,விபச்சாரம் என்பது மனதால் மாசுபடுவது
என்பதை ஏற்றுக்கொண்ட காலம்.இதற்குமேல் இதில்
விமர்சிக்க ஏதும்இல்லை.
நட்புடன் சேகர்..   
  

Thursday 12 January 2012

விழாக்கள்,பண்டிகை,வாழ்த்துக்கள்.

அன்பு நட்புக்களுக்கு வணக்கம்,

வாழ்த்துக்கள் பலவடிவங்களும்,வார்த்தைகளும் கொண்டு நம்மை நாம் பிறருக்கு வெளிப்படுத்தும் செயலாகவே கருதுகிறேன் .
விழாக்கள் ,
பிறந்தநாள், திருமணநாள்,இவை அன்றி
இன்னும் சிலர் பொருள் வாங்கியது என
அதற்கும் விழா என்று விழாக்களை நாம்
கொண்டாடி வருகிறோம்.
பண்டிகை,
சமயம் சார்ந்து அவரவர் மரபுக்கு
தக்க அனுசரிப்பது என்பதே இதுவரை
நாம் அறிந்த ஒன்று.
நான் இந்த பதிவை தமிழ் புத்தாண்டு
வாழ்த்துக்கள் என்று பதிவிடநிணைத்து ஆரம்பித்தேன்.அதில்வந்த குழப்பம்
தமிழ் புத்தாண்டு, தமிழர் புத்தாண்டு இப்படி  இருவகையாய் இன்று பிரிந்து கிடக்க இதை எப்படி சரியாய் முடிவெடுப்பது  என்பதில் தான் .
விழா என்றால் தமிழ் புத்தாண்டு ,
பண்டிகை என்றால் தமிழர் புத்தாண்டு
என்று நினைத்து மீண்டும் குழப்பமே.இதிலும்  கட்சி அரசியல்
வந்து நம்மையும் தமிழயும் குழப்புகிறது.
தமிழாய் தமிழனாய் வாழ அனைவருக்கும் வாழ்த்துக்கள் என்று நட்புடன் என்றும் சேகர்..  

Wednesday 14 December 2011

காதலும், நட்பும்..

அன்பு நட்புக்களே,  
                                 காதலும்,நட்பும்
வேறு வேறு தளங்கள்,ஆனால் புரிதலின் ஆரம்பம் என்பது
மட்டும் இரண்டுக்கும் பொதுவாய் அமைந்து போனது.

காதல் புரிவது நம்மை அடுத்த பாலருக்கு புரியவைப்பது ,அடுத்த பாலினத்தை புரிய முற்படுவது.
இதன் ஆரம்பம்-சற்று தாமதித்தாலும் -தரம் தாழ்ந்தாலும்
விபிரீதம்-விளைவிக்க தயங்காது.

இதை வாலிபம் தவிர்த்து பார்த்தால்-பல கோணங்கள்
புரியும்.
காதல் புரிய -புரிய கசக்கும்,அல்லது விலகும்.
நட்பு புரிய-புரிய வளரும்-விளங்கும்.
காதலில் அடிப்படை அறிந்து கொள்ள அதற்கு   
இலக்கணம் இல்லை.
நட்பின்அடிப்படை  இலக்கணமே ஏற்பது.

     அண்ணலும் நோக்கி ,அவளும் நோக்கி
                          வந்த காதல்
   அரசகுலம் சந்தித்தது-சரியாய் போனது.

  அம்பிகாபதி ஏன் அமராவதி ஆனது
  சமுதாய ஏற்றமா,சாதிய மாற்றமா?
 தோல்வி கண்ட காதல் எல்லாம் காவியம் ஆனது.
 வெற்றி என்பது காதலுக்கு கிடையாது.

 புரிதலின் ஆரம்பம் காதல் என்றால்,
வெற்றி என்பது புரிந்த தவறாய் முடிந்துவிடும்.
தவறு எப்படி வெற்றியடையும்?
ஆதலால் காதலுக்கு வெற்றி கிடையாது.

நட்பு நம்மை நாம் அறிய நமக்கு கிடைத்த
அற்புத கருவி--
அதை நாம் கையாளும் விதம்-தீமையும்
நன்மையும்,விகிதம் மாறும்.

எப்பொருளும்  ஏற்பது எல்லாம் முழுபயன்
தராது.உணவு உட்பட.

உண்ட உணவில் எத்தனை கழிவு என்பது
யாருக்கு தெரியும்.
இருந்தும் ஏற்கிறோம்,பிரிப்பது நாம் அறியா
வண்ணம் நடப்பது இல்லையா?
ஏற்பது என்பது நட்பின் இலக்கணம்.
கழிவை கழித்து வலு சேர்க்க நட்பு
அவசியம்.
காதல் வரும் கண்டஉடன்-காணாத போதும்.
 
காதலே கூடாதா என்பது போல் அல்லவா
செல்கிறது காதலும்-நட்பும்.முடிவுதான் என்ன?

பாலினம் தவிர்த்து வந்தால் நட்பாய் ஏற்கும்
நாம் எதிர் பாலினத்தை ஏன் காதலால் கவரவேண்டும்?
 
காதலில் வரும் பந்தம் சமுதாய மாற்றம் தரும்
என்று வாதிட்டால்-அதை விட முட்டாள்தனம்
வேறில்லை.

காதல் இல்லாத வாலிபம் விரும்ப தகாதது.
முரணாக இருக்கிறதா!!!
காதலை வேறுவகை படுத்தி ரகசிய சிந்தனையில்
அடைத்ததன் பலன்,   
 காதல் என்பது பலவேறு கோணங்களை சந்தித்து
சீரிழந்து போனது.

சிந்தனை சிதறல்களை செம்மை படுத்தாமல்,
நுனிமழுங்க வைத்தது.

காதல் புரி-புரிகிறவரை-புரியாத போது?

இரை-இன்பம்-இனப்பெருக்கம்,இவை முன்றும்
உயிரினத்தின்  பொது மறை.
இவையன்றி ஏன்-எதற்கு என்ற இறை-தேடியது
மானிட முறை.
மாண்டு-மாண்டு மீண்டாலும்-
சிரிக்கவும்-சிந்திக்கவும் தெரிந்த உங்களுக்கு
தெரியாதா என்ன செய்ய வேண்டும் என்று!!!!    
நட்புடன் சேகர்..

Monday 5 December 2011

விமர்சனம் விமர்சனம்

அன்பு நட்புக்களுக்கு வணக்கம்,
                                                                           ஒருவிமர்சனம் என்பது படைப்பாளியை ஊக்குவிக்க அல்லது திருத்தி கொள்ள             பயன்படவேண்டும்.இது பத்திரிக்கை யாளனுக்கு மிகவும் முக்கியம்.
இன்று தினத்தந்தி சினிமா விமர்சனம் என்னை இதை எழுத தூண்டியது.
போராளி திரு,சமுத்திர கனி இயக்கம் திரு,சசிகுமார் மற்றும் பலரின் கடுமையான உழைப்பில் வெகு  நேர்த்தியாக கையாளப்பட்ட  சமுக சிந்தனை உள்ள தமிழ் படம்.
இதை நான் தனிப்பட்ட முறையில் விவரிப்பது விமர்சனத்தில்  வராது.என்தாக்கத்தின் வெளிப்பாடு

ஒருபொது ஜன பத்திரிகை அதன் விமர்சனம் என்பது எத்தனை தாக்கங்களை உருவாக்கும் என்பதை உணரவேண்டும்  என்பதை சுட்டிக்காட்ட வேண்டும் என்பதே இப்பதிவின் நோக்கம்.
விமர்சனம் எழுதிய நண்பர் கதையின் கருவை அதன் உறவுகளை  மிகவும் தவறாக குறிப்பிட்டு கடமைக்கு எழுதியதாகவே தெரிகிறது.புரியாவிட்டால் மீண்டும் ஒரு முறை படத்தை பார்க்கவும்.
என்னுடைய கடந்தகால சினிமா பார்த்த வரலாற்றில் என்னை தகித்த தாக்கம் செய்த படங்களில் முதல் படம்துலாபாரம். இரண்டாவது மாகநதி,அதன் பிறகு போராளி.
இப்படி சில படங்கள் மட்டுமே சினிமா என்பதை தாண்டி சில சமுதாய தாக்கங்களை உருவாக்கும்.
நண்பர்கள் இது குறித்து இப்பதிவை சரியான தளத்தில் பதிவேற்ற விரும்புகிறேன்.

  நட்புடன் சேகர்..