Monday 8 August 2011

சினிமா விமர்சனம்..

வணக்கம் நடப்புக்களே,
                                                  சனிக்கிழமை(6 /08 /11 )அன்று மதியம் சத்தியம் திரை 
அரங்கில் "தெய்வத்திருமகள்" படம் என்மனைவியுடன் கண்டுவந்தேன்.
 வெகு நாட்கள் சென்று திரையாரங்கில் படம் பார்த்தது புது அநுபவம்தான்.
சத்யம் திரை அரங்கம் புதுவடிவம் பெற்று இன்றுதான் முதன் முதாலாய் 
காணும் சந்தர்ப்பம் கிடைத்தது.
திரைஅரங்கு என்பது இன்றைய  சூழலுக்கு படம் பார்ப்பதை தவிர்த்து 
 ஏனைய பிற விடயங்கள் இருக்கிறது.காசுதான் வேண்டும்.
பாமரன் வந்தால் பரிதவித்து போய்விடுவான்.தமிழ் என்பது மருந்துக்கு கூட,
கிடையாது,ஆங்கிலம் தெரியாவிட்டால் சிறுநீர்கழிக்ககூட கடினம்தான்.
இத்தனையும்  அரங்குக்கு உட்புறம்,வெளிப்புறம் அதே அவலட்சநங்கள்.
வண்டியை நிறுத்த 2 கிலோமீட்டர் சுற்றி வந்து நிறுத்தனும்.அதற்கு 10 ரூபாய் கட்டணம்.இதைஎல்லாம் சகித்து படம் பார்க்க கட்டணம் 120 ரூபாய் மட்டும்.  
இன்னும் நிறைய இருக்கு அதை தனிஒரு பதிவாக தருகிறேன்.

                                                    படத்தைபற்றி     
தலைப்பு மிகவும் அருமை,படத்தின் அத்துணை நடிகர்களையும் ,
தவிர்த்து ஒரு அருமையான குழந்தை நம் மனதை தன்நடிப்பால்
அசரவைக்கிறது.மீண்டும் ஒரு ஷாலினி தமிழுக்கு என்றுதான் 
உணர்தேன்.அத்துணை பஹாவங்களும் சாதரணமாக வருகிறது.
உச்சக்கட்டம் என்பது இயக்குனரின் எண்ணம்.இப்படிமாறும் 
மனநிலை,மிகசிலருக்கு மட்டும்  சொந்தம்,அதையும் கூட மனநிலை 
பாதிப்பில் உள்ளவருக்கு மட்டும் என்பது அதிலும் ஒரு அழுத்தம்,
சரியாக  சொல்வதும்,அன்பைமட்டுமே யாசிப்பதும் இன்றைய 
சூழலில் மனநிலை பதிப்பு உள்ளதாக காண்பித்தது உண்மையின் 
வெளிப்பாடு.
வக்கீலின் இன்றைய நிலை காட்சிக்கு காட்சி சரியாக கட்டப்படுகிறது.
இருந்தும் இப்படியொரு மனிதாபிமானம் உள்ள LJ (lawjaki)சினிமாவில்மட்டும் சாத்தியம்.அதுவும் காதல் வருவது அதைவிட 
அதிகம்.காதநாயக தனமும் வில்லத்தனமும் காட்டப்பட்டாலும்,அடிதடி 
இல்லா அதிசயம்,வரவேற்ப்புக்குரியது.இசை,பட, கோர்ப்பு அருமை.
பணம் அதிகம் இருந்தால் போய் பாருங்கள். நான்பார்த்தது மனைவியின்  
நிர்வாக கணக்கு.நிலா நீண்ட ஆயுளையும் நிறைந்த அறிவையும் பெற்று,
வளமுடன் வாழ வாழ்த்துக்கள்.
நட்புடன் சேகர்..

Tuesday 2 August 2011

முகநூலும் நானும்.

                                  திங்கள் தினத்தந்தி தந்த சேதி,
முகநூல் பின்னடைவு,உலகஅளவில் எடுத்த கணக்கடுப்பில்,
முகநூல் 15 வயது முதல் 25 வயதுவரை விரும்பிய இப்பக்கம்,
தற்போதய கணக்கடுப்பில் 40 வயதுக்கு மேற்ப்பட்டவர்கள் தான்,
அதிகம் உள்ளதாகவும்,கூகுள் சமூக இணையதளம் முதலிடம் 
வகிப்பதாக வந்துள்ள செய்தி தெரிவிக்கிறது.
முகநூல் என்பது என்பார்வையில்,
       பால்ய  வயதில் தாய் போல,
      இளம் வயதில் காதலி போல,
     முதுமையில் மனைவிபோல,
     உணர்கிறேன்.
பருவங்கள் மாறும் போது உணர்வுகளும் மாறாத்தன் செய்கிறது.
அதை பகிர்ந்து கொள்ள உறவுகளும் மாறத்தான் வேண்டும்.
இப்படி முகநூலில் மனித முகங்களை மட்டும் தேர்வு செய்து,
நட்பு பாராட்டி பதிய ஒரு தளம் இது என்பதில் ஐயமில்லை.

தவறுகள் இல்லா மனிதம் மாற்றம் காணாது,நமக்கு உள்ளதை 
அல்லது தேவையை தெரிந்து தெளிந்தால்.நாடும் வீடும் நலம் பெறும்.


அன்று வள்ளுவம் சொன்னது(முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து 
அகநக நட்பது நட்பு)
இன்றைய நடப்பு  முகநூல்நட்பே அகநக நட்பின் ஆரம்பம் ஆனது.

நான் மேலும் உணரும் ஒரு மகத்தன விடயம் என்தனிமை தவிர்க்க 
படுகிறது.
முகநூலில் உலவும் நேரம் என் அருகில் அமர்ந்து நட்புக்கள் அளவளாவுதாகவே தோன்றும்.
கற்றது  கைமண் அளவு கல்லாதது உலகளவு.
அவ்வையின் முது மொழி.
இச்சிறப்பும் முகநூலுக்கு முழுமையாய் உண்டு.
வாழட்டும் முகநூல்,வளரட்டும் நட்பு.
நட்புடன் சேகர்..